அமரர் இராசரத்தினம் கனகம்மா
மலர்வு : 28 நவம்பர் 1935 — உதிர்வு : 14 செப்ரெம்பர் 2018

யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கனகம்மா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்புள்ளம் கொண்ட எங்கள் தெய்வமே
ஊர் போற்ற வாழ்ந்த உங்களின்
இறுதி நொடிகளில் உம் முகம் காணாது
தவித்த எமக்கு தினமும் கனவில் வந்து
உம் உருவம் தெரிகின்றதம்மா...

கருணை உள்ளத்தோடு வாழ்ந்த நீவிர்
பலரின் எண்களையெல்லாம் பாசத்தினால் வென்று
அன்பின் இலக்கணமாய்த் திகழ்ந்தீரே
மறக்க மனதில்லையம்மா உம்மை இழக்க
இதயத்தில் இடமுமில்லையம்மா...

வாழ்ந்த நாட்களை வசந்தமாக்கிச் சென்ற
எம் தெய்வத்தின் இழப்பு உறவுகளையும்
எம் உள்ளத்தையும் விழியோரம்
நீர் சொரிய வைக்கின்றதேயம்மா...

காலன் சதிசெய்தாலும் கல் நெஞ்சம் கொண்டோர்
சதி செய்தாலும் எம் நெஞ்சிலிருந்து பிரிக்கவே
முடியாதம்மா உங்களின் பாசப் பிணைப்பை
ஏழேழு ஜென்மத்திலும் நீங்களே வேண்டும்
அம்மாவாக என வேண்டுகின்றோமம்மா
நிதமும் இறைவனை...

எமது குலவிளக்கு அணைந்த போது துயர் துடைக்க நேரில் வந்தோர், உடனிருந்து எமக்கு உதவிகள் செய்தோர், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோர், முகநூல் வழியினூடாக துயர் பகிர்ந்து கொண்டோர், மின்னஞ்சலூடாக அனுதாபங்களைத் தெரிவித்தோர் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி நிகழ்வு 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அந்தியேட்டி நடைபெறும் இடங்கள்:
ப. கனகராணி(மகள்)
Thurgau Kanton,
8570 Weinfelden,
Switzerland.(+41779727287)

சி. கேதீஸ்வரி(மகள்)
73 Bambridge Street,
Ajax, ON L1Z 1R2,
Canada.(+14169928134)

இ. இராசகுமார்(மகன்)
Newbury Park,
Ilford,
London(+447402334330)

தகவல்
இ. சிவகுமார்(மகன்- கனடா)
தொடர்புகளுக்கு
சிவகுமார்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168981334
Loading..
Share/Save/Bookmark