அமரர் தில்லையம்பலம் ஜனகன்
(ஜனா)
தோற்றம் : 6 ஓகஸ்ட் 1971 — மறைவு : 13 செப்ரெம்பர் 2018

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் ஜனகன்- ஜனா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஓளிப்பிளம்பாக எங்களை வாழவைத்துக்
கொண்டிருந்த எங்களின் அன்புச் செல்வமே,
அன்புத் தெய்வமே, ஆசை அப்பாவே,
பாசமுள்ள அண்ணாவே, அன்பு மருமகனே,
அன்பும் பண்பும் கொண்ட மைத்துனரே,
ஆருயிர் தோழனே(மச்சியே),
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடன்.

அன்னாரின் பிரிவுத்துயர் செய்திக்கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் அவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

13-10-2018 சனிக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறவுள்ள அந்தியேட்டி வீட்டுக்கிருத்தியை கிரியைகளிலும் அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Salle Jeanne d'Arc, 50 Place de Torcy, 75018 Paris, France. (Métro Ligne 12- Marx Dormoy) எனும் முகவரியிலுள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ள மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதர்சினி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33761454680
Loading..
Share/Save/Bookmark