அமரர் தவராஜலிங்கம் தவசீலன்
(யாழ்/ இந்துக் கல்லூரி பழைய மாணவர்)
அன்னை மடியில் : 29 யூலை 1970 — ஆண்டவன் அடியில் : 5 ஒக்ரோபர் 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தவராஜலிங்கம் தவசீலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

"இவை எனது இதயத்தில் ஒலிக்கின்ற ஓசைகள்"

இரண்டு ஆண்டுகள் மறைந்தாலும் எம்மால் உமது பிரிவை மறக்க முடியாது! இரண்டு குழந்தைகளும் அப்பா எப்போது வருவார் என ஆவலுடன் இருக்கின்றார்கள். ஆனால், அப்பா வரமுடியாத இடத்திற்கு போய்விட்டார். நீங்கள் இவ் உலகத்தில் பிறந்து செய்ய வேண்டியவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டீர்கள். ஆனால், நானும் என்னுடைய பிள்ளைகளும் என்ன பாவம் செய்தோம்.

உங்களுடைய ஆசை மகனை "தாரு" என்று செல்லமாக கூப்பிடுவீர்கள், அவனுக்கு அப்பா எங்கே என்று கேட்க்கத் தெரியாது. ஆனால், உங்களுடைய படத்தைப் பார்த்து விளையாடுவான். அவனுக்கு சரியாக கோபம் வரும், அவனை அமைதிப்படுத்துவது என்றால் பாட வேண்டும். அவனுக்கு பிடித்த பாட்டுவரிகள் "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும், அம்மாவ வாங்க முடியுமா" என்ற அந்த வரிகளை திருப்பி திருப்பி பாடவேண்டும். அப்போது தான் மகிழ்ச்சி அடைவான். காரணம் அவனுடைய அம்மாவின் முகத்திலேதான் அப்பாவை பார்க்கிறான்.

உங்களுடைய ஆசைமகளை "அம்மு" என்று தானே செல்லமாக கூப்பிடுவீர்கள். உங்களை அவளால் மறக்கமுடியவில்லை. எந்நேரமும் அப்பா வேண்டும் என்று கேட்பாள். அப்போது அவளை சமதானப்படுத்துவேன். இப்போது அம்மாவும் நானே! அப்பாவும் நானே! நன்றாக படிக்க வேண்டும் என்பேன்.

G.C.E.A/L ல் கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் என்னும் பாடத்தை எடுத்தேன். எனது வாழ்க்கையே நாடகம் ஆகிவிட்டது நாடகத்திலே ஒருவர் இரண்டு வேடத்தில் நடிக்கலாம். ஆனால் நிஜவாழ்க்கையில் ஒருவர் இரண்டு வேடத்தில் நடிப்பது கடினமானது அதைத்தான் இப்போது செய்கிறேன். அதாவது தாயாகவும், தந்தையாகவும் வேடம் ஏற்றிருக்கிறேன்.

October 5th என்னால் மறக்கமுடியாத நாள் நவராத்திரியில் லக்ஸ்மி பூசை அன்று கோவிலுக்கு போனனான். அர்ச்சனை செய்த பிரசாதம் கீழே தவறி விழுந்திருந்தால் உடனே நினைப்பேன் ஏதோ அபசகுணம் நடக்கப் போகின்றது என நினைப்பேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

எனது கணவர் இறக்கப் போகிறார் என்று தெரிந்தால் அவரை விட முதலில் இறப்பவள் நான்தான். காரணம் சுமங்கலியாக சாகவேண்டும் என்று எனது கனவு. " சத்தியவானனை யமனிடம் இருந்து காப்பாற்றியவள் தான் சாவித்திரி" அப்படிப்பட்டவள் தான் நான். உங்களுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் இறுதியாக உங்கள் மனதில் இருந்தவள் நானே!

October 5th இறுதியாக பார்த்தமுகம் பேசியமுகம் அதாவது இறுதியாக என்னுடைய பெயரை உச்சரித்து விட்டு இவ்வுலகத்தை விட்டு நெடுந்தூர பயணம் சென்றுவிட்டீர்கள். உங்களுடைய மகன் உங்களை ஒருதடவை வந்து பார்த்தான். கடைசியாக உங்களை தூக்குகின்ற போது என்னுடைய கைகள் மேல் உங்களுடைய கை விழுகின்றது. அதாவது எனது கடமை முடிந்துவிட்டது. எல்லாவற்றையும் நீதான் சுமக்க வேண்டும். என்னால் சுமக்க முடியாது. நான் புறப்படுகிறேன். ஆனால், எனக்கு தெரியும் எனது கணவர் எல்லா கடமையும் முடிந்ததும் என்னை அழைத்துச்செல்வார். இன்று படிக்காமல் "விதவை" என்ற பட்டத்தை எடுத்துவிட்டேன்.

நான் இருவரையும் அப்பா இல்லாத குறைதெரியாமல் வளர்ப்பேன். எமது மகனை கதைக்கவைப்பேன், இருவரையும் நன்றாக படிக்க வைப்பேன். இது நான் உங்கள் மீது வைத்த அன்பு. உங்களுடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். எமது குடும்பத்திற்க்காக உதவி செய்த உறவுகள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களுக்கு நாம் வணங்கும் தெய்வமான மேல்மருவத்தூர் அம்மன் அருள் புரிவார்.

உங்கள் அன்பான மனைவி-ஷாமினி, ஆசைமகன்- தாருஜன், ஆசைமகள்- தாருக்‌ஷா

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஷாமினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447741845473
Loading..
Share/Save/Bookmark