அமரர் சாரதா கெளசலாநிதி
மலர்வு : 22 ஏப்ரல் 1961 — உதிர்வு : 8 ஒக்ரோபர் 2012
திதி : 2 ஒக்ரோபர் 2018


முல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதா கெளசலாநிதி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஆறு அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவுகள் எம் அடிமனதில்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அம்மா

அன்பாலும் பண்பாலும் எமை கவர்ந்த
பண்பு நிறைந்த தாயே பாசத்தின் ஊற்றே
துன்பத்தை உனக்குள் புதைத்து இன்பத்தை எமக்குள்
விதைத்த தாயே உன் நினைவால் துடிக்கின்றோம்!
தவிக்கின்றோம் இன்றுவரை நாமம்மா

அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது
ஆண்டுகள் ஆறு ஓடி மறைந்தன
எமை அரவணைத்த அம்மா எங்கே
ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே?
கட்டித்தழுவிய கரங்கள் எங்கே
இன்று நீ எங்கே அம்மா!

நாம் மண்ணைத் தொட்ட நாள் முதல்
நீ விண்ணைத் தொடும் நாள் வரை
நீ சொரிந்த அன்பிற்கு எல்லைகள் ஏதம்மா
அம்மா தூக்கம் தொலைந்து ரொம்ப நாளாச்சு
ஒரு முறை போதுமா உன் கடன் தீர்க்க
ஒரு முறை என்ன இன்னும் ஓராயிரம் முறை
உன் மடியினில் மறுபடி பிறந்து
உன் தீரா கடன் தீர்த்திட வேண்டும்.!

வாழ்க்கை என்னும் பயணத்தில் நீ கடந்ததுவோ
பாதி வழி மீதி வழியில் மகாராணி எனும்
மகிடம் சூட்டி அழகு பார்ப்போம் என
உன் பிள்ளைகள் உள்ளத்தில் பல கனவு கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்
கண்மூடி மறைவாய் என
கனவிலும் நினைக்க இல்லை அம்மா!

எல்லா நினைவுகளும் நீங்களாகி
உங்கள் உயிர் உள்ளவரை வாழ்ந்தோம்
இப்போ ஆறாத ரணங்களுடன் ஆயிரம்
இரவுகள் அழுதாலும் பிரிவின் துயர் குறையவில்லை
உன் அன்பு முகம் மறக்கமுடியவில்லை!

ஆயிரம் தான் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும் நிகர் உண்டோ
அம்மா மீண்டும் நீ உதித்து உன்
அழகு முகம் தோன்றாதோ என
விழித்துக் கொண்டு இருகின்றோம் அம்மா
அன்பின் கதகதப்பும் வலிக்காத தண்டனையும்
இனி யார் தருவார் எங்களுக்கு.

என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்கும்
பிள்ளைகள், மருமகன், மருமகள், பேரப்பிள்ளைகள்.

தகவல்
மகள், மகன்
Loading..
Share/Save/Bookmark