திரு சவரிமுத்து வரப்பிரகாசம்
(ஓய்வுநிலை காணி வெளிக்கள மேற்பார்வையாளர்)
பிறப்பு : 13 டிசெம்பர் 1936 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2018

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் வீதியடியை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து வரப்பிரகாசம் அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து வரோனிக்கா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(பொலிசார்) இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, ஞானம்மா மற்றும் மரியநாயகம்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானராஜன், ஜெயசோதி(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெயராஜன், குகராஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கௌசலா(முகாமைத்துவ உதவியாளர்- கிளிநொச்சி), ஜோசப்சந்திரகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சண்முகம், நாகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரோஜன், தனுஜன், வினுஜன், தருணிகன், றுசானி, றூசா, லீசா, அபிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94214913007
செல்லிடப்பேசி:+94776933826
சந்திரகுமாரன் — கனடா
செல்லிடப்பேசி:+15146851637
தாசன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770255939