திரு சுப்பையா இராஜதுரை
மண்ணில் : 12 மார்ச் 1931 — விண்ணில் : 7 ஒக்ரோபர் 2018

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜதுரை அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தையல்நாயகி(இந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும்,

வசந்தி(பிரான்ஸ்), பாபு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகரெத்தினம்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

ராஜன், குமுதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சரட்ணம், தவமணி மற்றும் லலி(இந்தியா), பவானி(இந்தியா), குமாரி(இலங்கை), சிறி(டென்மார்க்), கதிர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாந்த், கிருஷ்ணிகா, சிந்துஜா, அஜீத், அஷ்வின், நிஷா, லஜீ ஆகியோரின் அன்புப் பேரனும்,

டிவ்யா, டிலான், லேனா, கஜீல் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஓயாமாரி மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695933980
பாபு(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33141810514
செல்லிடப்பேசி:+33651969791
பவானி(மைத்துனி) — இந்தியா
தொலைபேசி:+914314024923
கதிர்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33665645508
சிறி(மைத்துனர்) — டென்மார்க்
தொலைபேசி:+4550277443
Loading..
Share/Save/Bookmark