அன்னை மடியில் : 10 சனவரி 1970 — ஆண்டவன் அடியில் : 7 ஒக்ரோபர் 2018
கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜமுனா சுபேஸ்கரன் அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், குலசேகரம், காலஞ்சென்ற தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுபேஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆரபி, ஆநிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரதிவதனி(இலங்கை), ஜெயந்தி(பிரான்ஸ்), ரவிகரன்(லண்டன்), கலாவாணி(லண்டன்), கலாநந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அஜித்குமார்(இலங்கை), செல்வராஜா(பிரான்ஸ்), சாந்தி(லண்டன்), சந்திரகுமாரன்(லண்டன்), மோகனதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதாகரன்(கனடா), சுஷிகரன்(சுவிஸ்), சுதர்சன்(லண்டன்), சுமணாகரன்(பிரான்ஸ்), சுகந்தினி(நோர்வே), சுதர்ஷினி(சுவிஸ்), சுரேஷினி(பிரான்ஸ்), சுபாஷினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.