பிறப்பு : 28 நவம்பர் 1935 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2018
யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கனகம்மா அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிக்குட்டி தெய்வானை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம்(ஓய்வுபெற்ற ஊழியர்- ஊறணி வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
குணராணி(லண்டன்), கனகராணி(சுவிஸ்), கேதீஸ்வரி(கனடா), குலசிங்கம்(சுவிஸ்), சிவகுமார்(கனடா), இராசகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பரமேஸ்வரி, பாக்கியம் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கந்தசாமி(இலங்கை), பரமேஸ்வரன்(சுவிஸ்), சிவநேசன்(கனடா), சுபாசினி(சுவிஸ்), சர்மிளா(கனடா), சுபாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நகுலேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சிவசாமி, நாகராசா(இலங்கை), மகாலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பூவரசம்திட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.