திருமதி சண்முகநாதன் இராசம்மா
தோற்றம் : 27 யூலை 1944 — மறைவு : 17 யூலை 2018

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் இராசம்மா அவர்கள் 17-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குணரட்ணம் கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தன்(ஜெர்மனி), தயானந்தன்(ஜெர்மனி), சசியானந்தன்(இலங்கை), சாந்தகெளரி(சாந்தி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்கயற்கரசி, காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், அருளம்பலம், பூபதி மற்றும் கமலாதேவி, சுதாகரன், சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணபாலினி, நிரோஜினி, பாமினி, அருள்நேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரவீன், பிரவீனா, ஆகாஷ், சமீரா, ரிசித்தா, சனுரன், சனுரிகா, மதுஷன், அரிக்‌ஷா, அரிஸ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 178,
உதயநகர் கிழக்கு,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94777366748
Loading..
Share/Save/Bookmark