அமரர் நடராசா சசிவண்ணன்
பிறப்பு : 1 சனவரி 1970 — இறப்பு : 21 ஒக்ரோபர் 1988

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சசிவண்ணன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புச் செல்வமே ரவி...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
பக்கபலமாய் இருப்பாய் என்றிருந்தோம்!

கண்ணிமைக்கும் நொடிப் பொழுதினில்
கயவர்களின் குண்டு பட்டு உன்
உயிர் பறிக்கப் பட்டதேனோ?..

கண்ணா உனது உயிர் பறித்த செய்திகேட்டு
மனமுடைந்து உருக்குலைந்து நின்றோம்!
மனதில் இது உண்மையாய் இருக்கக்கூடாது
என ஏங்கி தவித்தோம்!

ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உம் நினைவு என்றென்றும்
எம்மனதில் நிறைந்திருக்கும்...

காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்!

எம் நினைவிலும் செயலிலும் என்றும் நீயே ரவி...
உமது ஆத்மா சாந்தியடைய நாங்கள் எல்லோரும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark