அமரர் சின்னத்துரை லலிஸ் லாலினி
(நிலா)
பிறப்பு : 3 செப்ரெம்பர் 1973 — இறப்பு : 12 ஓகஸ்ட் 2008
திதி : 7 ஓகஸ்ட் 2018


யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை லலிஸ் லாலினி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆத்மார்த்தமாய் ஓர் வலி
எமக்குள் எப்போதும்
வலித்துக் கொண்டேயிருகிறது !

எத்தனை கனவுகள் !
எத்தனை வலிகள்!
அத்தனையும் சுமந்து
வாழ விரும்பிய போது
வாழவிடாத காலனோடு!

போராடித் தோற்ற போதும் கூட
உன் எண்ணங்களை
ஏற்கும் சக்தியை கொடுக்க
கடவுளை வேண்டினாய் ஏனோ
கடவுளும் கொடுக்கவில்லையே!

கற்பனையிலும் நீ வாழ்வதற்கு
வாழ்ந்த கதை முடியும் முன்
இறந்திடவா நீ பிறந்தாய் என
எண்ணி முடிக்கையில்
முடிந்து விட்டது பத்தாண்டு
பலநூறுறாயிரம் ஆண்டாலும்
ஆறாது எம் துயரம்!

என்றும் உன் நினைவுகளுடன்
சின்னத்துரை(அப்பா), மனோன்மணி(அம்மா), சகோதர சகோதரிகள் மற்றும் அருஷாந்(மகன்)

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33164219154
Loading..
Share/Save/Bookmark