அமரர் பாஸ்கரன் கிஷாந்த்
பிறப்பு : 7 செப்ரெம்பர் 1995 — இறப்பு : 8 ஓகஸ்ட் 2017

சுவிஸ் St.Gallen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் கிஷாந்த் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுநாள்

தவம் இருந்து கேட்டாலும்
வாழ்க்கையிலே உன்னைப்போல்
தரமான மகன் ஒன்று
தரணியிலே யார் பெறுவார்!

நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!

தங்க மகனுமாய் நல்ல நண்பனுமாய்
உன் சேயாக எங்களுக்கு
சேவை செய்யும் சேவகனாய்
பாசமாக பணி விடைகள் பல செய்தாய்
இன்று நேசம் மறந்து நெடுதூரம்
சென்றாயே!

அறநெறி தவறாது அன்பு கொண்டு
அக்கம் பக்கம் சுற்றம் எல்லாம்
அனுசரித்து உறவினர்கள் நண்பர்கள்
உள்ளமெல்லாம் நிறைவான எண்ணங்கள்
நிலைக்க வைத்தாய்

என்றும் இமை போல் எமைக்காத்த
என் உயிரின் நினைவுகள் நிலைத்திருக்கும்.

நண்பா கிஷி,
உன் நினைவுகள் சுமந்து
நாம் ஆடுகளங்களில்
உன் இதயம் மூலம் நீ எமைத்
தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பாய்
உன் அழகான சிரிப்பு
என்றென்றும் எம்முடன்
பிணைந்தே இருக்கும்...

மீண்டும் எம்மிடமே வா
நீ நேசிக்கும் உதைபந்தாட்டமும்
நாங்களும் உனக்காக காத்திருக்கின்றோம்...

உன் நினைவுகள் என்றென்றும் எம்முள்ளே
இருக்கும்...

உன் உறவோடு உறவாடிய சுவிஸ் அனைத்து உதைபந்தாட்ட கழக நண்பர்கள்

என்றும் உன் நினைவில்
அப்பா, அம்மா, தங்கை, தம்பி மற்றும் குடும்பத்தினர்கள்.

கிஷாந்த்  அவர்களின் நினைவுக்கல் திரைநீக்கம் 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகிறோம்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786990680
Loading..
Share/Save/Bookmark