அமரர் தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன்
தோற்றம் : 27 ஏப்ரல் 1960 — மறைவு : 10 ஓகஸ்ட் 2016

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, சுவிஸ் Laufen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நற்பண்பின் பிறப்பிடமாய் பாசத்தின் ஒளியுருவாய்
மலர்ந்த எம் ஆருயிர்த் தலைவா!!!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச் சென்று
ஈராண்டு காலம் வந்ததே ஐயா!

எங்கள் எல்லோர் மனதிலும் என்றும் அணையாத
தீபச்சுடராய் வாழ்ந்து கொண்டிருக்கும்- நீர்!
கட்டிய மனையாள் கண்கலங்கி நிற்க 
கண்காணாத தேசம் சென்றதேனோ? - நீர்
பெற்ற பிள்ளைகள் பாசத்துக்கு ஏங்கி நிற்க
பாதியில் பிஞ்சுகளை பிரிந்ததேனோ?

உயிருக்கு மேலானவரே..!
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து போகின்றதய்யா!

ஊர்விட்டு ஊர்வந்து எல்லோரிடத்திலும்
அன்பாகவும், பண்பாகவும்
வாழ்ந்த நாட்களை யார் மறப்பார்?

இருக்குமிடத்தில் கலகலப்புடனும்
மற்றவரின் கஸ்ட துன்பங்களைக் கண்டு
இன்னல்களைத் தீர்த்தவருமானவரே!

ஐயோ என்ற அலறல் ஒலி
இன்னும் ஓயவில்லை எம் மனதில்!
நீர் எங்கு ஓடி மறைந்தீரோ!

ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
அகலாது உம் பிரிவு
மறக்கமுடியுமோ? எம்மையெல்லாம்
ஆழாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் சென்றதை?..!

எம் அன்புத்தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

என்றென்றும் உங்கள் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark