திரு பொன்னையா சண்முகநாதன்
தோற்றம் : 17 டிசெம்பர் 1936 — மறைவு : 19 யூன் 2017
திதி : 8 யூலை 2018


யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தந்தையோடு கல்வி போம்
என்பார்கள் அந்த இழிநிலைக்கு நாம்
ஆளாகாமல் அற்றைத் திங்கள்
அவ்வெண்ணிலவில் எம்முடன் கூடி
வாழ்ந்து எட்டு வகைச் செல்வமும்
எமக்களித்து இற்றைத் திங்கள்
இவ் வெண்ணிலவில் எமை விட்டுப்
போய் ஆண்டொன்று ஆனதே தந்தையே!

தலைநகர் வாசலில் வீற்றிருந்த
தலைவன், தலைவியுடன்
பிள்ளைகளை தவிக்க விட்டதென்ன?
தந்தையாய் நாம் பெற்ற தலை
சிறந்த மனிதன் தரணி விட்டு போய்
விடவே பதறிப் போனோம் சிந்தை
கலங்கிச் சிதறிப் போனதய்யா!
தந்தையே உனையிழந்து
ஆண்டொன்று ஆனதையா!

காலமெல்லாம் நிமிர்ந்து வாழ கல்வி
தந்தாய்! கண்ணியமான துணையைத்
தேடி நல் வாழ்வு தந்தாய்! திருமலை
வாழ் பெருமானே! சட்டென்று
பெருமலை சரிந்தது போல்
சரிந்ததென்ன பொன்னான சரீரம்
எரிந்து நீராகி ஆண்டொன்றாகியும்
கண்ணீர் ஆறாகப் பெருகுதையா!

நேற்றுப் போல் இருக்கிறதே!
ஐயகோ! ஊற்றாய் ஊர் போற்ற
வாழ்ந்த பெருமானை கூற்று வந்து
அழைத்துப் போனதெங்கே?
ஆற்றுப்படுத்த முடியாமல் இதயம்
விம்மி விம்மி வெடிக்கிறதே!

கோணேசப் பெருமானே குறை என்ன
செய்தோம்? வருடம் ஓன்றாகியும்
இதயங்களில் வலி குறையவில்லையே!
கல்வி தந்தவர் கண்ணிறைந்த
வாழ்வு தந்தவர் மண்ணுலகில் நாம்
மானத்தோடு வாழத் தன்னையே
தானம் தந்தவர் வானம் சென்றதேனோ?

அளப்பரிய தியாகம்
செய்த ஐயாவின் திடீர் இழப்பு
மாயமாய் இருக்கிறதே! நின் பிரிவு
காலம் கடந்தாலும் காயத்தைப் பிழிகிறதே!

நேசமுடன் எப்போதும்
எல்லோருடனும் பாசமுடன் பழகும்
தந்தையே! உள்ளத்தைச் சிதைத்து
உயிர் வரை தைக்கிறதே! உள்ளத்தைச் சிதைத்து
உயிர் வரை தைக்கிறதே! கனவில்
வந்தேனும் எம் உள்ளக் கவலை தனை ஆற்றாயோ?

நிலை குலைந்து போனோம்
கோணேசா! மாதுமையாளோடு நீ
வீற்றிருக்கும் திருமலையில் தன்
மாதரசியையும் பிள்ளைகளையும்
தவிக்க விட்டுப்போய் ஆண்டொன்று நிறைகிறதே!

சிலையென அசைவற்றிருக்கும்
எங்களை ஆற்றுப்படுத்து,
ஏற்றுக்கொள் எம் தந்தையே!
எல்லா உயிர்க்கும் தந்தையான
கோணேசப் பெருமானே!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark