அமரர் பேதுறுப்பிள்ளை கபிரியேப்பிள்ளை
(ஓய்வுபெற்ற கடற்படை வீரர், யாழ். பல்கலைக்கழக ஜிம்னாஸ்ரிக் பயிற்றுனர்)
பிறப்பு : 2 பெப்ரவரி 1936 — இறப்பு : 14 யூன் 1993

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நாவாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேதுறுப்பிள்ளை கபிரியேப்பிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன

பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோரின்
கடமை என்பதையும் மீறி உங்கள் எல்லையற்ற
அன்பால் அரவணைப்பால் எங்களைச் சிறப்புற
வாழவைத்து அதைப் பார்த்து மகிழாமல்
பாதியில் சென்றுவிட்டீர் !

நிஜமான உங்களை எங்கள் அருகில் வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !

நாம் மறையும் மட்டும் உங்கள் கம்பீரத்
தோற்றம் எங்களின் மனதை விட்டு மறையாது
உங்கள் அன்பில் வளர்ந்த நாங்கள்
எங்கள் அன்பில் உங்களை வளர்த்திடும்
பாக்கியம் எமக்கு கிடைக்காதோ
என ஏங்குகின்றோம்!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark