அமரர் விஜயகுமார் டினேஸ் சுஜீத்
பிறப்பு : 19 செப்ரெம்பர் 1996 — இறப்பு : 18 யூன் 2013

சுவிஸ் Winterthur ஐ பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகுமார் டினேஸ் சுஜீத் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?

என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?

மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?

நாம் ஆற்றுவதற்கு வார்த்தையில்லை
சாவதற்கு காலனவன் வரவில்லை
இருண்ட இவ்வுலகில் வாழவும் முடியவில்லை
சாகவும் முடியவில்லை செய்வது
எது என்று தெரியாது தவிக்கின்றோம் ஐயா!

நின் திருவுருவம் என்றென்றும் எம்முன்
ஆண்டவனாய் ஜென்மம் எல்லாம் இருக்கும் ஐயா!
ஆத்ம திருப்திக்காய் ஆண்டவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என்றென்றும் உன் நினைவால் வாடும் என்றும்
உன் அன்பு உள்ளங்கள்

தகவல்
அப்பா, அம்மா, தங்கை
Loading..
Share/Save/Bookmark