அமரர் மகேந்திரேஸ்வரி சின்னத்துரை
மலர்வு : 24 ஓகஸ்ட் 1928 — உதிர்வு : 16 ஏப்ரல் 2018

யாழ். பருத்தித்துறை தும்பளை தம்புருவளைப் பிள்ளையார் கோயில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரேஸ்வரி சின்னத்துரை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ்.

அன்னார், முத்துக்குமாரு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை சரவணையைச் சேர்ந்த திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலணை சரவணையைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை(ஓய்வுநிலை போதனாசிரியர்- மேசன் பயிற்சிக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருந்தவராஜா, இன்பமலர், விஜயராஜா, வரதராஜா மற்றும் மனோரஞ்சிதமலர்(ஓய்வுநிலை பரி சாரகர் சுகாதார பகுதி), குணரஞ்சிதமலர், முத்துராஜா(உரிமையாளார்- தும்பளை முத்துராஜாபுரடக்சன்ஸ், ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வரத்தினம், குணராஜவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாலிங்கம், சுசீலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வேலணை சரவணையைச் சேர்ந்த துரையப்பா(8ம் வாய்க்கால்), செல்லையா(ஓய்வுநிலை இராணுவ அதிகாரி), மார்க்கண்டு, கைலாயபிள்ளை(தும்பளை), காலஞ்சென்ற நமசிவாயம், நடராஜா(ஓய்வுநிலை உத்தியோகத்தர் நகரசபை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விமலராஜா, நித்தியராஜ், நித்திய பிரபா, நித்திய ஜீவனா, விமலராணி, காலஞ்சென்ற நித்திய சபேசன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

நிலோஜினி(லண்டன்), காலஞ்சென்ற சதீசன், நிரஞ்சன், பிரியங்கா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வர்சன், யுவன்(லண்டன்), பிரவின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் பருத்தித்துறை முனை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் நடைபெற்றது.

“அம்மா என்று அவனிதனில் யாரை அழைப்போம் இனி- நாம்”

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 16-05-2018 புதன்கிழமை அன்று அதிகாலை 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில்(கைலயங்கிரி) நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், இரங்கல்களை தெரிவித்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — ஜெர்மனி
தொலைபேசி:+49303619752
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94777680198
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94775026355
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447450261516
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94779772691
Loading..
Share/Save/Bookmark