அமரர் ஜனகன் விஜயமனோகர்
அன்னை மடியில் : 5 செப்ரெம்பர் 1994 — ஆண்டவன் அடியில் : 16 ஏப்ரல் 2011

யாழ். சுழிபுரம் மேற்கைப் பூர்வீகமாகவும், லண்டனை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜனகன் விஜயமனோகர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே ஜனனா
அறிவின் சுடர்விளக்கே எம் ஆருயிரே!
பிரிவின் வலியை விதைத்து – ஏழு
ஆண்டுகள் ஆயினினும் ஏழேலாயிரம்
ஆண்டுகள் போல் கனக்குதையா!

நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ...!

பந்தமாய் பாசமாய் பகிர்ந்தவையும்
சொந்தமாக செல்லமாக கண்டிப்பதும்
இன்று நித்தமும் எமை நிந்திக்கின்றனவே!
அன்று நீயெமை தழுவின பரிசமதுவும்
இன்றும் எமை புல்லரிக்க வைக்குதையா!

காலன் உனைக் கவன்றது விதியா - அன்றோ
காவலன் தன்னருகு இருத்த செய்த சதியோ!
கண்ணிமை போல் காத்த உனை - அன்று
கண்ணீர் சொரிய விட்டுக் கவர்ந்ததேனோ..!

நாட்கள்! மாதங்கள்! ஆண்டுகளானாலும் - நமை
ஆண்ட நின் திருவுருவம் என்றென்றும் - எம்முள்
ஆண்டவனாய் ஜென்மமெல்லாமிருக்குமையா!

வேண்டுகிறோம் ஆத்ம திருப்திக்காய் - நம் சுழிபுரத்து
பெரியதம்புர முருகப்பெருமான் திருப்பாதங்களை!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றென்றும் நின் நினைவால் வாடும்
என்றும் உன் அன்பு உள்ளங்கள்!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark