அன்னை மடியில்  ஆண்டவன் அடியில்
9 பெப்ரவரி 1935  28 செப்ரெம்பர் 2016
அமரர் சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்
(இளைப்பாறிய Architect Engineer)
அன்னை மடியில்  ஆண்டவன் அடியில்
30 யூலை 1942  26 மார்ச் 2017
அமரர் கனகம்மா இரத்தினசிங்கம்
(இளைப்பாறிய ஆசிரியை- மல்லிகா ரீச்சர்)

திதி: 15-03-2018(திரயோதசி)

சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் :
யாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்களின் 18ம் மாத நினைவஞ்சலி.

கனகம்மா இரத்தினசிங்கம் :
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வை  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நிஜங்களின் பாச நினைவுளோடு எம் இதயத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஆசை அப்பாவே, அன்பான அம்மாவே!


சங்கில் இருந்து முத்துக்கள் உதிர்வது
முத்துகளுக்கு பிடிக்காமல் நிகழும் நிகழ்வு
பூக்களை அழகென்று பொய் பேசும் நாம்
பெற்றோரின் பாசத்தை அன்பை புரிந்து கொள்ள
தவறிவிடுகின்றோம் குணத்தில் அழகுடை பெற்றோர்
அரவணைப்பில் எப்போதும்
அளவில்லா பொருளுடையோராவார்

பிறர் வலிக்கும் குணம் கொண்டோர்
வாழும் இவ் உலகினில்
பிறர் வலிக்காது வாழ்ந்து நின்றார்
விதி தந்த விதிக்கணக்கு முடிந்ததாய் போகவைத்து
உரியவன் பசிதீர்க்க பாசமுள்ள உம் உயிரை
பக்குவமாய் பறித்துக் கொண்டான்

புன்னகை பூத்து நின்று புது மலராய் மலர்ந்து நின்றீர்
வாழுகின்ற காலமதில் வாடாது வாழ்ந்து நின்றீர்
நல்லதொரு பெற்றோர் பாசமுள்ள பெற்றோர் நீவிர்
கூடும்வரை வாழாது விட்டு காலகதியில் மறைந்து விட்டீர்

தள்ளாத வயோதிபத்தில் தவறாது காப்போமே
எண்ணியிருந்தேன் பலநாளாய் தண்ணீரில் எழுதியதாய்
மாயம் செய்து மாண்டீரே மன்னிக்க வேண்டுகின்றேன்
மனமுவந்து ஏற்றுடுவீர்

தினந்தோறும் நினைக்கின்றேன்
தினம்தோறும் அழுகின்றேன்
காலம் வாழும்வரை கரையாது
வாழ்ந்திடுவீர் எம் நெஞ்சத்தே
கொழுவிருந்து...........

நீங்காத நினைவுகளுடன்  நாள்தோறும்
வாழ்ந்துகொண்டிருக்கும் பாசமிகு பிள்ளைகள்

தகவல்
சத்தியவாணி இரத்தினசிங்கம்
தொடர்புகளுக்கு
வாணி — கனடா
தொலைபேசி:+14162764333
Loading..
Share/Save/Bookmark