அமரர் சுப்பையா செல்லத்துரை
(முன்னாள் ஆசிரியர்- யாழ். கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம், பொல்காவலை தமிழ் பாடசாலை)
தோற்றம் : 22 செப்ரெம்பர் 1924 — மறைவு : 14 மார்ச் 2016
திதி : 23 மார்ச் 2018


யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா செல்லத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எண்ணிடல் வேண்டா எம்
அகத்தின் அணையாத தீபம்
எமைப் பிரிந்து சென்றதாக

ஏங்கிட வேண்டா எம்
அணையாத ஜோதி
எம் இதயத்தில் அணைந்ததாக

தெய்வ உலகம் நோக்கி
அவர் பயணம் செய்து
ஆண்டு இரண்டானாலும்
துவக்கம் அவருக்கு அதுவேயாகும்

எங்கள் தெய்வ மகன் அவர்
இறைவன் பதி நோக்கிச் சென்றார்
அங்கே ஆண்டுகளோ
நாட்கணக்கோ எதுவுமில்லை
அன்புக்கு ஆளான அவர்
மனம் தொட்டோர் இதயமெலாம்
பேரன்பாய் அருட்கடலாய் வாழ்கின்றார்!

அழிவில்லா தெய்வீக ஆன்மாவாய்
ஆலமரமாய் நீங்கள் வேர்படர்ந்து விரிந்து
சத்தியம், கருணை, அன்பு எனவுயர்ந்து
உறுதியாக இருந்ததனாலன்றோ - நாம்
எளிமையான, நிறைவான, அமைதியான
வாழ்வுதனை வாழ்கின்றோம்!

குருவின் அருட்பார்வையினால்
சத்தியத்தின் நிலை தவறாத
உங்கள் தாகம் நம்மை
முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி செல்ல
காற்று வெளியிடையே ஆன்மாவாக
இறைவனுடன் ஒன்றிக் கலந்து நிற்கும் நீங்கள்
ஆசீர்வதியுங்கள் 

எப்போதும் எம் உயிர்க்காற்றாம் 
ஆன்மா உங்கள் தூய தெய்வீக ஆன்மாவுடன்
ஒன்றிக்கலக்க மானசீகமாக
இறைவனை வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி சாந்தி!

நீங்கள் இங்கே இல்லாவிட்டாலும் வேறெங்கோ
ஆத்மாவாக இருக்கின்றீர்கள் என்ற எண்ணத்தால்
ஆறுதல் அடையும்
உங்கள் மனைவி, பிள்ளைகள்!

 

Realize what a gift you have been given.
Understand the beauty that is dancing in front of
your very eyes.
Don't wait !! This is your time.
Grab the request for peace in your heart !
find that contentment in your life.
That's what peace is.
Peace is beautiful.
Peace is real.
Peace is that passion for existence,
a feeling, an understanding of what life means
what every day means,
what every hour means,
what every breath means.

-Prem Rawat-

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசமணி செல்லத்துரை — கனடா
தொலைபேசி:+15147350352
செல்வராஜன் செல்லத்துரை — கனடா
தொலைபேசி:+15147350799
செல்லிடப்பேசி:+14164995101
வித்தியாதரன் செல்லத்துரை — கனடா
தொலைபேசி:+15147350352
மணிமேகலா புவேந்திரலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி:+19052012714
மணிமேகலை யோகரமணன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61398590985
Loading..
Share/Save/Bookmark