அமரர் இராசையா மனோன்மணி
(நல்லம்மா)
மலர்வு : 18 மார்ச் 1931 — உதிர்வு : 11 பெப்ரவரி 2018

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா மனோன்மணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

வெண்பிறை நெற்றியில் விபூதி நீற்றழகும்
அதில் ஒளிரும் சந்தனப் பொட்டழகும்
தினம் துதிக்கும் உருத்திராட்ச மாலையழகும்

தெட்டத் தெளித்த உள்ளத்தழகும்- கள்ளம்
கபடமற்ற குழந்தைப் பேச்சழகும் -இன்னும்
கோடி கோடி உன் நினைவுகளுடன்
இருக்கும் வரை நாம் இருக்க வேண்டும்
எம் தாயே
உனை மறக்கும்
நிலை வரின் இறக்க வேண்டும்

அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கும்!
குடும்பத்தினர்

எமது அன்னையின் பிரிவுச்செய்தியறிந்து உடன் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், பலவழிகளில்  உதவிகள் புரிந்தோருக்கும், தொலைபேசி மூலம்  அனுதாபம் தெரிவித்தும், ஆறுதல் கூறிய அனைத்து நல்  உள்ளங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
சசி இராசையா
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94112736023
Loading..
Share/Save/Bookmark