அமரர் ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு
மலர்வு : 5 பெப்ரவரி 1975 — உதிர்வு : 9 சனவரி 2015
திதி : 4 சனவரி 2018


யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் காத்தாயே!
பண்போடும் பணிவோடும் பாசமாய் வளர்த்தாயே!
நட்போடும் நலமோடும் நாளெல்லாம் வாழ்ந்தாயே!
வாழ்ந்த கதை சொல்லும் முன்னே- நீ!
வீழ்ந்த கதை வந்ததென்ன- எமக்கு
நேர்ந்த கதி என்னவென்று- எம் நெஞ்சம் தான் அறியும்!

ஒன்றும் சொல்லாமல் உத்தமனே நீ போக!
உடைந்து போனதய்யா உள்ளம் தானிங்கு
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
நித்தம் எங்களை நிலைகுலைய வைத்தாயே!
காற்று போல நீ காணாமல் போனதனால்!
தோற்றுப் போனதய்யா நாம் தொடங்கிய எல்லாமே!

அப்பா வேண்டும் என்று அன்பு மகள் தினம் ஏங்க!
இரக்கம் கொண்ட நீ எதிரில் வந்தது போல்
ஏங்கி அவள் நின்ற எல்லா பொழுதுகளும்
தாங்கி தான் கொண்ட தங்க கரம் ஒன்று
தானாய் மனமுவந்து தன் மகள் கரம் சேர்த்து
காக்கும் கடவுளாய் கண்மணியை ஏந்திக்கொள்ள
சொல்ல வார்த்தை இல்லை சொந்தங்களும் புரியவில்லை!
சோதனைகள் எல்லாமே சொல்லவும் முடியவில்லை!

நேற்றுப் போல் எல்லாமே நெஞ்சோடு நிறைந்திருக்க
நீங்காத உன் நினைவோடு நாம்
நித்தமும் வாழ்கின்றோம்!
ஆண்டு மூன்று ஆனாலும் அன்பு கொண்ட உன் வதனம்
அருகில் இருப்பது போல் உணர்கின்றோம் அன்பால் என்றும்!

ஒம் சாந்தி! ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!!!

உன் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள்.

தகவல்
குடும்பத்தினர்(சுவிஸ்)