அமரர் வேலுப்பிள்ளை சீனிமுத்து
(சரசு)
மலர்வு : 5 செப்ரெம்பர் 1937 — உதிர்வு : 6 நவம்பர் 2017

யாழ். வடமராட்சி செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சீனிமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆத்மா அணையுமட்டும் - எம்மை
அகக்கருவில் சுமந்தவளே!
உன் ஆத்மா அணைந்து
ஆனதம்மா ஓர் திங்கள்!

நீங்கள் கோடி மறைந்தாலும்
நிரைந்திடுமோ?உன் நினைவு
வங்கக்கடல் அலை போல்
வான் உயர முட்டுதம்மா!

தாயாகி, தந்தையுமாகி- எம்மை
தரணிக்குத் தந்தவளே
போனாயோ சிவன் மகன்
புகலிடத்தைத் தேடி..?

எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட எங்கள் அன்னையின் மறைவுச்செய்தியைக் கேட்டு எங்கள் இல்லத்திற்கு வருகைதந்து எங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், அனுதாபச்செய்திகளை தொலைபேசி மூலம் தெரிவித்தவர்களுக்கும், வேண்டிய உதவிகளை வேண்டியவாறு செய்து அன்னாரின் இறுதிக்கிரியையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளிலும் கலந்து கொண்டு எமக்கு எல்லா விதத்திலும் ஆறுதல் அளித்த உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட அனவருக்கும், இறுதிக்கிரியை ஒழுங்குபட நடாத்திய Manikkratnam(Manikkam Funeral Directors LTD) அவர்களுக்கும், அம்மாவின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டிய அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மகான் — பிரித்தானியா
தொலைபேசி:+442037375697
செல்லிடப்பேசி:+447453271325
ராஜன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786946976
Loading..
Share/Save/Bookmark