அமரர் மதிசூதனா தர்சிகன்
அன்னை மடியில் : 9 நவம்பர் 1990 — ஆண்டவன் அடியில் : 4 டிசெம்பர் 2015

யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதிசூதனா தர்சிகன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அருமை மகளே!!!
காலை கண்விழித்த நொடி முதல் உன் ஞாபகங்கள்
உன் நினைவுகள் எங்கள் மனதில், அழியா சுவடுகளாய் பதிந்துள்ளன
நீ இல்லாத வாழ்க்கை, நரகமாய் உள்ளது மகளே!!

உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது.

நீ வேண்டும் எங்களுக்கு, உன்னுடன் வாழ்ந்த
அந்த பொக்கிஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்
ஆண்டுகள் இரண்டென்ன, இருநூறு ஆண்டுகள் சென்றாலும்,
தேயாத நிலவாக எங்கள் மனதில் பதிந்தாய்
ஓயாத நினைவுகளை எங்கள் உள்ளத்தில் தந்தாய்

உன் அழகான முகம், அன்பான மனம்,
உன் குழந்தை குணம், கொடுக்கும் குணம்,
இதையெல்லாம் நினைத்துப் பார்க்க,
ஒரு ஜென்மம் போதாது மகளே!!

அன்பின் உறைவிடம் நீயே, பண்பின் பிறப்பிடம் நீயே,
நீயோ ஒரு குழந்தை, ஆனால்
இங்கு நீ பெற்ற உன் செல்ல மகன் உனை நினைத்து
எந்நாளும் ஏங்குகிறான் மகளே!!
என் அன்பான மனைவியே!! அன்பு அன்னையே!! அன்பு மகளே!!
எங்கள் சகோதரியே!! நீ மீண்டும் வரமாட்டாயா???

இறைவன் அவனுக்கு பிடித்தவர்களை சீக்கிரமே,
தன்னுடனேயே கூப்பிட்டு விடுவானாம்,
இத்தனை நல்ல குணம் படைத்த உன்னையும் அவன்,
தன்னிடமே அழைத்து விட்டான்,

நீ அந்த இறைவனின் பாதர விந்தங்களில் இளைப்பாறு மகளே!
உனது ஆத்மா சாந்தியடையட்டும் .

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உனது அன்பிற்கு ஏங்கும்,
அப்பா, அம்மா,
கணவன், மகன்
மற்றும் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark