அமரர் கந்தையா தியாகராஜா
(Adm. Secretary Cum. Chief Clerk of Chavakachcheri MPCS Ltd)
பிறப்பு : 24 யூலை 1942 — இறப்பு : 18 நவம்பர் 2016
திதி : 7 டிசெம்பர் 2017


யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே நீங்கள்!
உங்கள் அரவணைப்பின்றித் தவிக்கின்றோம் நாங்களிங்கே
ஆண்டு ஒன்றானாலும் ஆறவில்லை எம்துயரம்
மீண்டுமொரு பிறப்பிருந்தால் எங்களிடமே வந்திடுங்கள்!

உயிர் தந்து உடல் தந்து உழைப்பையும் தந்தீர்கள்!
உடனிருந்து அரவணைத்து உணவளித்துக் காத்தீர்கள்
துணிவுடன் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்தீர்கள்
தூயவரே நாம்வாழ வழியமைத்துத் தந்தீர்கள்!

எங்களின் உயர்வுக்கு நீங்களே வழிகாட்டியப்பா
உங்களின் பிரிவின்றி வேறுகுறை இல்லையப்பா
எங்களின் தோட்டத்தில் வாசமலர் நீங்களப்பா
எங்களின் மாலையிலிருந்து ஏன்வாடி உதிர்ந்தீர்கள்!

கைவண்ணம் கண்டவுடன் கண்கள் நனைகின்றன
மெய்வண்ணம் நினைந்தவுடன் மேனியெல்லாம் எரிகின்றது
இல்லறக் கடமையெல்லாம் இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள இறைவன் அழைத்தானோ
!

உங்கள் நினைவுகளைக் காலமெல்லாம் சுமந்து நிற்போம் எனக்கூறி எனது பாசமிகு கணவரினதும் மற்றும் தந்தையாரினதும் பாதங்களைப் பணிந்து அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவாக 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் லண்டன் ஈலிங் ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் ஆத்ம சாந்தி பூசையிலும் அதனைதொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள், அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+442084228064
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447722567354
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447710156695
Loading..
Share/Save/Bookmark