அமரர் முருகானந்தன் உதயகுமார்
மலர்வு : 11 யூன் 1965 — உதிர்வு : 29 நவம்பர் 2012
திதி : 4 டிசெம்பர் 2017


யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகானந்தன் உதயகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்

இன்று போல் நினைப்பு உம் கைபட்ட
 என் கன்னங்கள் என்றுமே மாறாது
எம் வாழ்வின் நினைவுச் சின்னங்கள்

கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்

காவல் தெய்வமாய் என்றும் இருப்பதாய்
கனக்கும் எம் இதயங்கள்

உம் ஆத்ம சாந்திக்காய் வேண்டும்
ஆருயிர் மனைவி, பிள்ளைகள்

தகவல்
மனைவி, பிள்ளைகள்
Loading..
Share/Save/Bookmark