அமரர் சுப்பையா தர்மகுலராஜா(தர்மா)
தோற்றம் : 17 யூலை 1968 — மறைவு : 27 நவம்பர் 2016

நினைவு நாள்: 27 நவம்பர் 2017

யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா தர்மகுலராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் ஆறமுடியவில்லை எம்மால்!..!

இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!

அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?

உன் புன்சிரிப்பைக் கண்டு...!
இனிமையான குரலைக் கேட்டு...!
ஓராண்டு காலம் கலைந்து விட்டதே!

காற்றுப் பெருவெளியில் உனைக் காணும்
நாளுக்காய் காத்திருக்கும் நாம்
கடவுளை வேண்டுகின்றோம் ஆத்ம சாந்திக்காய்!

தகவல்
மருமக்கள், சகோதரிகள்
Loading..
Share/Save/Bookmark