அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம்
(உரிமையாளார்- மெட்ரோ சிம்புளோன் ஞானமணி பல்பொருள் வாணிபம், திரான்சி ஞானமணி பல்பொருள் வாணிபம்)
கண்மகிழ : 12 சனவரி 1935 — கண்நெகிழ : 9 டிசெம்பர் 2016
திதி : 28 நவம்பர் 2017


யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

சிந்தை எல்லாம் நிறைந்த
சீலத் திருவுருவே அன்னையே!
இப் பூவுலக வாழ்வுதனை நீத்து
ஆண்டு ஓன்று கடந்ததுவோ?

உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை எமக்கு
உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும் காலம் இனி
என நாம் மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?

உங்களை இழந்த கணம் முதல்
உளம் சிதைந்து துடிக்கின்றோம்!

எங்கள் வாழ்வாதாரமே
எங்கள் அன்னையே!
வானத்து முழுமதியாய்
வற்றாத தேனாறாய்
பல நூறு மாந்தருக்கு
வயிறு குளிர அமுதூட்டி
எம் நல் வாழ்க்கைக்கு
தன் நலனை ஈர்ந்துவிட்டு
மெழுகுவர்த்தி போன்றே
தியாகமாகிப் போனீரே!
எம் ஆரூயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு ஒளி தருவீர்..!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் ஓராண்டு நினைவஞ்சலி நினைவாக 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று 59 Rue Albert Beugnet, 93700 Drancy, France என்னும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பூசையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொண்டு எங்களை ஆறுதல்படுத்துமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33148303908
Loading..
Share/Save/Bookmark