அமரர் துரைசிங்கம் மகேந்திரன்
பிறப்பு : 8 ஓகஸ்ட் 1966 — இறப்பு : 28 நவம்பர் 2016
திதி : 17 நவம்பர் 2017


யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்

வானில் மின்னும் நட்சத்திரமாய் ஒளிரும் தெய்வமே
வாழ்வில் எங்களை சுமந்து நின்ற தந்தையே
தேன் இனிக்கப்பேசி தேசமெங்கும் உறவுகளின் மனத்தேரில்
என்றென்றும் உலாவரும் மகேந்திரனே

ஏன் அப்பா எங்களையெல்லாம் தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா

விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
உங்களைத் தேடுகின்றோம்
விழிநீர் துளிர்த்து உங்கள் பாதங்களில்
பூவாய்த் தூவுகின்றோம்

ஆண்டொன்று உங்களை பிரிந்து
அகன்றோடி மறைந்தாலும்
ஆருயிர்த் தந்தையே உங்கள் நினைவுகள்
எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்

 உங்கள் ஆன்மா சாந்திக்காய் வேண்டும் வரம் நல்கும்
நயினைத் தாயின் பாதம்பணிந்து
வேண்டுகின்றோம்

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும்
மனைவி, பிள்ளைகள், உறவுகள்

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark