அமரர் பரமானந்தம் நித்தியானந்தகுமார்
(பவா)
தோற்றம் : 26 யூலை 1951 — மறைவு : 27 நவம்பர் 2016
திதி : 16 நவம்பர் 2017


யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமானந்தம் நித்தியானந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான புன்முறுவல் ஆறுதல் கூறுமொழி
எந்நாளும் மற்றவர்க்கு உதவுகின்ற நல்ல குணம்
பண்பாக உறவுகளை பேணுகின்ற பெரிய மனம்
ஒன்றாக அத்தனையும் கொண்ட எங்கள் பவா!

எமை விட்டுச் சென்றின்று ஓராண்டு ஆனதுவே!
பல்லாண்டு நீ வாழ்வாய் பார்த்து நாம் மகிழ்ந்திருப்போம்
என்றெண்ணி கனவு கண்டோம் எதுவுமே இன்றில்லை
கண்ணீரில் எமைவிட்டு பரமனடி நாடி விட்டாய்!

ஓராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை நாமென்றும்
அஞ்சலிப்போம் உன் ஆத்மா சாந்திபெற
ஈசனவன் பாதத்தில் இனிதே அமைதி கொள்ள!
என்றும் அன்பு மனைவி, உறவினர்கள்.

தகவல்
யோகாம்பிகை(யோகா- மனைவி)
தொடர்புகளுக்கு
யோகாம்பிகை(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41318394001
Loading..
Share/Save/Bookmark