அமரர் உதயராஜா கவிதா
மலர்வு : 10 மே 1980 — உதிர்வு : 14 நவம்பர் 2010

கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயராஜா கவிதா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

நாளும் பொழுதும் வாடாத
உன் வாசமதை இன்னும் நாம் நுகர்ந்தபடி!
ஊழும் கோளும் எமைப்பிரித்தாலும்
எம் மனதில் குடியிருக்கும்
என்றும் பிரிக்க முடியாதவளாய் நீ!

அலை மோதா சிலையழகாய்
கலை அழகாய் கல்வியொரு
நல் இயல்புகளையும் கொண்டு
ஒளி கொடுத்து இருள் நீக்க நீ
நிலவாயிருப்பாயென நாம்
நினைத்திருந்த வேளை.. !

அந்தச் சூரியனோ ! சிரித்துக் கொண்டே
தன் வட்டப்பாதையில் எங்களையும் அறியாமல்
உன்னை அணைத்துக் கொண்டது
இருந்த போதும் எம்மால் பின்நோக்கி உருளும்
உன் நினைவுகளை இன்னும் நிறுத்தமுடியவில்லை!

கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்!
அன்பு மகளே கவிதா........!!! 
உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்!

தகவல்
அம்மா
Loading..
Share/Save/Bookmark