அமரர் கந்தையா தில்லைநாதன்
(Lotus தில்லைநாதன்- பிரபல வர்த்தகர், இரத்தினபுரி)
இறப்பு : 11 ஒக்ரோபர் 1987

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தில்லைநாதன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

மறக்கமுடியவில்லை..
கண்கவரும் கம்பீரத் தோற்றமும்
கணீரென்ற கனிவான பேச்சுரையும்
அன்பே உருவான வட்ட முகம்தனிலே
இன்பமாய் உதிர்க்கும் உதட்டோர சிரிப்பும்

மறக்க முடியவில்லை..
தரைநோக்கி நடக்கும் நடைதனிலே வேட்டி
கரைதூக்கி பிடிக்கும் விரல்தனையும்
அமுதூட்டி அறிவூட்டி அணைத்த கைகளையும்
அகமகிழ்ந்து நாம் சாய்ந்த மார்பினையும்

மறக்க முடியவில்லை..
பணிகள் யாவும்  குறைவின்றி பூர்த்திசெய்து
வணிகனாக வலம்வந்த இரத்தினபுரிதனையும்
நாடிவந்தார் மனங்குளிர உதவிசெய்து
ஓடியோடி உழைத்த ”லோட்டஸ் ஸ்ரோர்ஸ்” தனையும்

மறக்க முடியவில்லை..
பெரும்செல்வம் பிள்ளைகளே என்றுரைத்து
அருங்கலைகள் கற்பித்து சான்றோராக்கி
பிள்ளைகள் நாம் கடந்தீர்க்க விளையும் முன்னம்
கொள்ளைநோய் உனைப்பிரித்து சென்றதனை

மறக்கமுடியவில்லை..
நீ நடந்த கால்தடங்கள் நாம் மிதித்தோம் உனை தேடி
நாம் வாழும் எழுவர் கண்டதெல்லாம் நீ செய்த தொண்டுகளே
ஆண்டுகள் மாறி ஆயின முத் தசாப்தங்களாய்
வேண்டுகின்றோம் உனதருளை உன்போல் வாழ்வதற்கு

என்றென்றும் தங்களின் பசுமையான
நினைவுகளுடன் குடும்பத்தினர்!

தகவல்
கேதீஸ்வரநாதன்(மகன்)
Loading..
Share/Save/Bookmark