அமரர் தனுஜா யோகராஜா
மலர்வு : 16 ஓகஸ்ட் 1986 — உதிர்வு : 13 நவம்பர் 2013

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுஜா யோகராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீயே எமையாள் இளவரசி!

அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே தனுஜாவே
உந்தன் பிரிவால் இன்றும்நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!

வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்ததுபோல்
கான மயிலே கண்மணியே
கானல் நீராய்ப் போயினையோ?

தங்க மகளே சந்தனமே
தாமரை மலரே வழக்கம்போல்
வங்கி வேலைக்குச் செல்கையிலே
வாகன இயமனைக் கண்டனையோ?

இருபத் தாறு வயதினிலே
எங்கள் வாழ்வை இருளாக்கி
அருமை மகளே தனுஜாவே
அரனடி சென்றது தகுமாமோ?

வன்னக் குயிலே வளர்மதியே
வாழ்வுக் கனவுகள் கலையமுன்னர்
கன்னி மகளே சென்றனையோ
காலச் சதியோ வினைவிதியோ?

ஆண்டு நான்கு இன்றுடன் ஆயிடினும்
அகலா(து) உன்னினைவு ஆள்கிறது
தூண்டா விளக்கைச் சூழ்ந்துன்னை
தூமகளே நாம் துதிக்கின்றோம்!

தகவே சிவபுரத் தரசன்தாள்
சார்ந்தே வாழ்வாய் தவமகளே
நிகரில் எமையாள் இளவரசி
நீயே என்றும் வாழியவே!

சித்தம் கலங்கி, நித்தம் தவிக்கும் எங்களுக்கு
ஆறுதலைத் தந்திடுவாய் இறைவா!
உன் ஆத்மா சாந்தியடைய பரமாத்மாவை வேண்டுகின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உன் பிரிவால் வாடித்துடிக்கும் குடும்பத்தினர்!!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark