அமரர் ஸ்ரீதவராஜா குருசாந்த்
பிறப்பு : 26 ஓகஸ்ட் 1988 — இறப்பு : 24 ஓகஸ்ட் 2016

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Welling ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதவராசா குருசாந்த் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆர்ப்பரித்த கடல் அன்னை
அணைத்திட்டாள் உனையன்றே

ஆண்டு பல சென்றாலும்
ஆறாது துன்பமடா

விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான் இல்லையன்றோ

ஆறி நிற்கும் நிழலாக
அருகில் இல்லை உன் உருவம்

கண்ட பல கனவிலும்
வந்து வந்து போகுதடா

சென்றுவிட்டாய் என்று என்னால்
சிறிதும் எண்ணத்தோன்றவில்லையடா

சொரியும் நீர் துடைக்க
வந்திடுவாய் என் மகனே .

அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனை 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+442083048490
Loading..
Share/Save/Bookmark