அமரர் விஜித்தா பவளராஜா
பிறப்பு : 23 ஓகஸ்ட் 1982 — இறப்பு : 8 செப்ரெம்பர் 2016

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலில் எனக்குத் துணைவியானாய்
பிறகு என் தோழியானாய்
ஒவ்வொரு வினாடியும்
என் நாடியோடு நாடியாய் கலந்திட்டவளே!

பாசத்திற்கு வரைவிலக்கணமாய் வந்தவளே
பண்பின் பிறப்பிடமாய் திகழ்ந்தவளே
உன்பிரிவால் ஆற்றவும் முடியவில்லை
எம்மால் ஆறவும் முடியவில்லை!

எங்களால் முடியவில்லை எம் செல்வமே!
எம் குடும்பத்தின் குல விளக்கு நீ
உன் கணவனின் அக விளக்கு நீ
கண்ணோடு் இமையானாய் அன்று
எம் கண்ணீரின் கதையானாய் இன்று!

விழி போல நீயிருந்தாய் என்றும்
நீர் சிந்தும் விழியானோம் இன்று!
பூவுலகத்தில் சொர்க்கத்தை நீ தந்தாய் அன்று
விண்ணுலகில் சொப்பனமாய் ஏன் சென்றாய் இன்று..?

வாழும் போதும் எம் வழிகாட்டி நீ
வானுலகில் இருந்தும் வழிகாட்டு நீ எமக்கு
மீண்டும் நீ வரவேண்டும் எம் குடும்பத்தில்
என்றும் காத்திருப்போம் உன் வரவுக்காய்!

ஓடிச் சென்றது ஓராண்டு
ஓடாது நிற்கும் ஓராயிரமாண்டு உன்நினைவுகள்....!
விதி என்றார்கள் விளங்காமல் சென்றோம்
விளங்க வைத்து பறந்து சென்றதோ சிட்டுக்குருவி!

எங்கே சென்றாயோ எமக்கு முகவரி சொல்லவில்லை
எமக்கு முகவரி வேண்டாமம்மா நீ தான் வேண்டும் !
வருவாயோ எம் தெய்வமே மீண்டும்......!!!!

என்றும் உன் நினைவுகளோடு வாழும் கணவர், பிள்ளைகள், உறவினர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பவன்(கணவர்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33986685010
செல்லிடப்பேசி:+33698923345
சோமு(மாமா, மாமி) — இலங்கை
தொலைபேசி:+94232222548
Loading..
Share/Save/Bookmark