அன்னை மடியில்  ஆண்டவன் அடியில்
3 டிசெம்பர் 1993  24 ஓகஸ்ட் 2016
அமரர் சத்தியநாதன் கோபிகாந்தன்
அன்னை மடியில்  ஆண்டவன் அடியில்
16 டிசெம்பர் 1997  24 ஓகஸ்ட் 2016
அமரர் சத்தியநாதன் கேனுகன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன், சத்தியநாதன் கேனுகன் ஆகியோர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே-எம்
செல்வங்கள் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?

என் செய்வேன் எம் செல்வங்களே!
தேடுகின்றோம் எம் பிள்ளைகள் போன
திசை எது என்று தெரியாது

கோபிக்குட்டியே! கேனுக்குட்டியே!
அம்மாச்சி அப்பா என்று அன்போடு
அழைக்கும் உங்கள் குரல் கேட்காதா
என்று ஏங்குகின்றோமப்பாக்கள்

நீங்கள் இருவரும் படித்து பட்டம் பெற்று
தருவீர்கள் என காத்திருந்த வேளை- உங்கள்
மரணச் சான்றிதழ் பெற்றுக் கொண்டோமையா

எம் குஞ்சுகளே ஓராண்டு என்ன ஓராயிரம்
ஆண்டானாலும் எம் மூச்சு உள்ளவரை தேம்புகின்றனர்
நண்பர்கள் அவர்களின் முகங்களில் உங்களை
பார்க்கின்றேனப்பா நல்ல நண்பர்களை
தேடி தந்து விட்டு எங்கே அப்பா சென்றீர்கள்.

மொட்டாகி பூவாகி காயாகி
கனியாகும் வேளையில் காத்திருந்து
படைத்தவன் பழி தீர்த்தானோ?

பாலகராய் ஐவரும் கடலில் நீராடச் சென்றீர்கள்
பாவமொன்றும் செய்தறியா பாலகர்கள் நீங்கள்
அணைத்தாளே கடல் தாய் தன் கருவறையில் 
நட்புக்கு இலக்கணமாகிய இளம் சிட்டுக்களே
சாவிலும் ஒன்றாக போனதேனோ?

நாம் ஆற்றுவதற்கு வார்த்தையில்லை
சாவதற்கு காலனவன் வரவில்லை
தேறுவதற்கு எம் குஞ்சுகள் நீங்கள் இல்லை
இருண்ட இவ் உலகில் வாழவும் முடியவில்லை
சாகவும் முடியவில்லை செய்வது எது என்று
தெரியாது தவிக்கின்றோமையா?

பாசக்காரர்கள் அப்பா நீங்கள்
பாசத்தின் உறைவிடம் நீங்கள்!

இந்த ஆண்டொன்றில் உங்கள் ஆத்மா
சாந்தியடைய வேண்டும் என்று
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

உங்கள் பிரிவுத் துயரில் துயருறும்
அம்மா, அப்பா, உறவுகள், நண்பர்கள்.

12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று 1 Normandy Way, Erith DA8 3PX, UK எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஆண்டு திதி நடைபெற உள்ளது. இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு அவர்களின் ஆத்மா சாந்திக்கு பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்
அம்மா, அப்பா, உறவுகள், நண்பர்கள்
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+441322334946
செல்லிடப்பேசி:+447450624261