அமரர் யோகசூரியன் திவாகரன்
மண்ணில் : 12 ஓகஸ்ட் 1987 — விண்ணில் : 16 யூலை 2017

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகசூரியன் திவாகரன்  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

ஆசை மகனே என் வயிற்றில்
வந்துதித்த என் ராசாவே என் திவாவே
பாசமுடன் உனை அணைத்து
பக்குவமாய் வளர்த்தெடுத்து
பாரினிலே உன் அழகை
நாம் ரசித்து நின்றபோது
பாவிகள் எங்களுக்கு
பரிதவிக்கும் கோலமையா!

வாசலிலே உன் முகம் பார்த்து
பகல் இரவாய் காத்திருக்க
தொலைபேசியில் வந்ததையா பேரிடியாய்
நீ இறந்த செய்தியொன்று
ஆறிடவும் முடியவில்லை
தேற்றவும் இனி நீயும் இல்லை
எம் கண்முன்னே உன் தோற்றம்
என்றைக்கும் பின் தொடரும்
எம் உயிர் உள்ளவரை
நாம் மறவோம் உன் அன்பை!

பெற்ற தாய் தகப்பனுக்கு
பெரிதுவக்கும் மகனாய்
நித்தம் உனை நினைத்து
நிர்க்கதியாய் நிற்கின்றோம்!

உன் உடன் பிறப்புகளுக்கோ
உன்னை இன்றி யாருமில்லை
உரிமையாய் கேட்பதற்கோ உடன் பிறப்போ
இனி நீயும் இல்லை

உன்னைப் போன்ற அண்ணாவை
இனி எப்போது நாம் பார்ப்போம்
உருகிறது எம் உள்ளம்
அண்ணா அண்ணா
என்று அழுகின்றது எம் கண்கள்
நீ இல்லா உலகை எண்ணி!

நீ இல்லா இவ்வுலகம்
இனி எமக்கு தேவை தானா
நீ வளர்த்த நாய்க்குட்டியோ
உன்னைத் தினம் தேடுகின்றது!

நீ இனி எப்போது வருவாய் என்று
உன் உயிர் நண்பர்களோ உனை இழந்து
வாடுகின்றனர்!

நாட்கள் கடந்து முப்பத்தொன்று ஆனதையா
எம் நாடித் துடிப்புகளோ
உனை இழந்து வாடுதையா!

எத்தனை நாட்களோ மாதமோ
வருடமோ சென்றாலும்
எம் உயிர் இருக்கும் வரை
உம்மை நாம் மறவோமையா!

பூப் போன்ற உன் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து
நித்தம் அழுகின்றோம்!

நீ இல்லா உலகில் இனி
எம் வாழ்க்கை நரகமைய்யா
இம் மண்ணில் நாம் வாழும் வரை
எம் கண்ணீர் துளிகளால் உன்
தெய்வத் திருமுகத்தை நித்தம்
நாம் கழுவிகின்றோம்

இனி நாம் வாழும் காலம் வரை
உன் நினைவுகளுடன்!

உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல எம் பெருமானை
வணங்கி நிற்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!

உங்கள் பிரிவால் துயருறும்
உங்கள் அப்பா, அம்மா, தங்கைமார்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி:+16473411219
செல்லிடப்பேசி:+16477181850
Loading..
Share/Save/Bookmark