அமரர் குமரேசு நல்லம்மா
(பெண் பரிசாரகர்- யாழ். போதனா வைத்தியசாலை)
மலர்வு : 22 யூன் 1931 — உதிர்வு : 11 ஓகஸ்ட் 1992

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமரேசு நல்லம்மா அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பான மனைவியானாய்
பாசமுள்ள தாயானாய்
குடும்பத்தின் ஒளி விளக்கானாய்
குற்றம் பொறுக்கும் தெய்வமுமானாய்!

நீ நடந்து சென்றால்
புல்லுக்கும் வலிக்காதென்பார்கள்
நீ போன பின்னாலே பிள்ளைகள் எங்கள் வலியை
யார் உனக்கு எடுத்துரைப்பார்கள்!

அந்நிய நாட்டில் அகதிகளாக நாமிருந்ததால்
புண்ணியவதியே உன் கடைசி முகம் காண
தகுதியற்றுப் போனோம் அம்மா!

ஆண்டு இருபத்தைந்து ஆனால் என்ன?
அடுத்த பிறவி பிறந்தால் கூட
எங்கள் அன்னை நீ தானம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!


தகவல்
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிள்ளைகள் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33781455995
Loading..
Share/Save/Bookmark