அமரர் தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன்
தோற்றம் : 27 ஏப்ரல் 1960 — மறைவு : 10 ஓகஸ்ட் 2016

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, சுவிஸ் Laufen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று போனாலும் ஆறாத நின் நினைவால்
மீண்டும் பிறப்பு உண்டேல் மேதினியில் வந்துதித்து வேண்டும்!

விழுமியங்கள் வித்தகரே கண்முன்னே
ஈண்டு முயன்றாலும் முடியுதில்லை நின் உருவம்!

குடும்பத்தலைவர் இன்றி குளிருமா எம் நெஞ்சம்
இடும்பை சூழ் நிலையாகி ஏக்கம் நித்தமுமாய்
அடுப்பு எரிந்தாலும் அரும் உணவு தேறுதில்லை
விடுப்பு விரைந்தது மேன் வேதனையில் வாடுகின்றோம்!

நித்தம் நினைவில் நிழலாடி நின் நினைவு
சோந்திழந்த சோகம் தலைமீறிச் சூழ வருந்துவதோ!

மெத்தவுமே மீண்டும் மீண்டு வந்து மீகலாட்டும்
சத்துணவு கிட்டாத சதா வாடும் நிலையானோம்!
என்றும் உம் நினைவுகளுடன் மனைவி,
பிள்ளைகள், உற்றார், உறவினர்.


தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41617611680
செல்லிடப்பேசி:+41799577735
Loading..
Share/Save/Bookmark