அமரர் செல்வகுமாரி கருணாகரன்
மலர்வு : 6 மே 1963 — உதிர்வு : 16 யூலை 2016

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வகுமாரி கருணாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!

அன்பின் உறைவிடமாய்
இல்லறத்தில் உயர்ந்து நின்றாய்
பெண் இனத்தின் பெருந்தகையாய்
நல்லறமாய் வாழ்ந்து சென்றாய்!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!

பிறர் பிள்ளை என்றாலும்
தன் பிள்ளை என்றெல்லோ
தார்பரிக்கும் தயாள குணம்
தாயகத்தின் காப்பகத்தில் – தான் உவந்து
தானமிட்டு சேவை பல செய்த
அன்பின் பெருஞ்சிகரமம்மா!

நாடு விட்டு வந்திடினும்
நற்றமிழை வளர்க்கவென்றெ
கூடு பொருள் தேடாது
பாடு பல பட்டாயம்மா
அம்மா உமைப் பிரிந்து இன்று
ஆண்டொன்று ஆனதம்மா- உன்
அன்பின் அரவணைப்பும் குன்றாத
பாசத்தின் தகதகப்பும்
அணையாத எரிமலையாய் -எம்
நெஞ்சமதில் குமுறி எரியுதம்மா!

தாயாகித் தாபரித்த அன்புக்
கணவன் கலங்கி நிற்க
சேயான செல்வ மக்கள்
தேறாது தேம்பி அழ- எமைப்
பாராது விழி மூடி- ஏனம்மா
பரிதவிக்க விட்டுச் சென்றாய்!

அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு - என்றும்
எம் அருகில் இருக்கின்றாய் - அதனால்
ஏங்கவில்லை நாம் இனிக் காண்போமா என்று

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்புக் கணவர், பிள்ளைகள், சகோதரர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94783813090
Loading..
Share/Save/Bookmark