அமரர் மனோன்மணி நவீனச்சந்திரன்
(சரஸ், ஓய்வுபெற்ற மருத்துவ ஆய்வுகூடப் பொறுப்பாளர்- மானிப்பாய் வைத்தியசாலை)
பிறப்பு : 3 ஒக்ரோபர் 1941 — இறப்பு : 28 யூன் 2000

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி நவீனச்சந்திரன் அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.

நொடிகளும் நிமிடங்களும்
நாட்களாய் மாதங்களாய் வருடங்களாய்
17 ஆகிப்போனதோ அம்மா
ஓடும் ஆண்டுகள் காலக்கணக்கு
எம் கனவிலும் கண்டிரா
உன் விதியின் கொடுங்கணக்கு!

உற்றாரின் மரணம் உயிரை உலுப்பும் வரை
மற்றாரின் மரணம் செய்தி தான் என்றிருப்போம்
ஆனால் ஊன் உறைந்து உயிர் வெளித்தெறிக்கும்
வலி தந்து உணர்த்தினாய் அன்று
வருவாய் வீடு  இன்று என்றிருந்தோமே அன்று
ஆனால் இதயம் நொருக்கிச் செல்வாய் என்றில்லையே அம்மா!

உள்ளேயும் வெளியேயும் கொண்டாய்
எமைக்காக்க ஒளிக்கருவறை - பின்
ஏன் எமக்களித்தாய் 'சூது' சூழ் உலகெனும் இருட்டறை?
காலம் கணித்து உன் ஆயுள் உரைத்தாய் எமக்கு
ஆனால் அதை உணராப்பிள்ளை புத்தியோ எமக்கு அன்று அம்மா?

விதியே எமக்கு மட்டுமேன் இந்த தாய்ப் பறிப்பு
காலக் கடிகாரமே கண்ணில் மீண்டும்
ஒரு முறை எம் கடவுளைக் காட்டாயோ?
பரிதவித்தோம் திக்கற்றுக் கிடந்தோம்
பின் தவழ்ந்தோம்!

இன்று தனியாக நடக்க பழகிக்கொண்டோம்
நீ காட்டிய நேர் வழியில் அம்மா
நோயிலும் போராடிப் போராடி எமை ஈன்ற பேரன்பே
உன் வாசம் எம் ஊனில் ஊறி உயிரில் கலந்து சுவாசத்தின் மூச்சாகி
எம் குழந்தைகளாய் சிரிப்பதை இன்று உணர்கின்றோம் அம்மா!

உன் அழகு, அவர்கள் அழகு
உன் சிந்தனைகள், அவர்கள் எண்ணங்கள்
உன் கனவுகள், அவர்கள் வழித்தடம்
உன் இலச்சியங்களே அவர்கள் இறுதி இலக்கு!

நொடிக்கு மேல் நொடியாக இன்று போல்
என்றும் நாம் ஐயம் இன்றி உணரும்
இப் பிரபஞ்சசக்தியாய் எம்மோடு நீ இருப்பாயாக!

உங்கள் பிரிவால் வாடும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள்மார் மற்றும் பேரப்பிள்ளைகள்.

தகவல்
நவதீபன்(கண்ணா- மகன்)
தொடர்புகளுக்கு
நவதீபன்(கண்ணா- மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788153002
Loading..
Share/Save/Bookmark