அமரர் விஜயகுமார் டினேஸ் சுஜீத்
பிறப்பு : 19 செப்ரெம்பர் 1996 — இறப்பு : 18 யூன் 2013

சுவிஸ் Winterthur ஐ பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகுமார் டினேஸ் சுஜீத் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீ இந்த மண்ணில் மீண்டும்
வந்து பிறக்க வேண்டும்
உனை அள்ளி எடுத்து
அணைக்க வேண்டும்!

பிறப்பின் இரகசியம் யாதெனக்
கேட்டேன் பிறந்து பார் என
இறைவன் பணித்தான்
பாசம் யாதெனக் கேட்டேன்!
பகிர்ந்து பார் என இறைவன் பணித்தான்!

எம் அன்புச் செல்வம் நீ
எம்மை விட்டு பிரிந்து 4 ஆண்டுகள்
ஆனால் உன் பசுமையான
நினைவுகள் எம்மனதை விட்டு அகலாது!

நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப் பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ!

நீ வான் உயரம் தெய்வத்தில்
ஒன்றாகி நின்று எமையெல்லாம் பார்த்திடுவாய்
என எண்ணி நான்காவது ஆண்டு
நினைவு நாளில் விழி அருவியாய் ஏங்கியே
நிற்கின்றோம் உமைப்பார்த்து!!

சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

உன் பிரிவால் வாடும் அப்பா, அம்மா,
தங்கை மற்றும் உறவினர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark