அமரர் நடராசா சந்திரபோஸ்
அன்னை மடியில் : 28 யூன் 1953 — ஆண்டவன் அடியில் : 20 ஏப்ரல் 2017

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராசா சந்திரபோஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும் அப்பா
உந்தன் அன்பொழுகும் தங்கமுகம் மறந்தோமில்லை

நின்நாடும் நினைவு நிழலாகத் தொடர்கின்றதே!
ஆத்மா அழியாதென்று அன்று நாம் அறிந்திருந்தும்
ஆறமுடியவில்லை ”அப்பா” உன் பிரிவுதனை!

ஆழமாகப் பார்த்தால் அப்பாவின் ஆத்மா என்றென்றும்
நிலைத்திருக்கும் நின்றெம்மைக் காத்திடுமே!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம்சாந்தி!!!

எங்கள் குடும்பத்தலைவரின் மறைவுச்செய்தி அறிந்ததும் எம்முடன் இருந்து சகல உதவிகள், ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், அதைவிட அன்றில் இருந்து இன்று வரை வேலை புரியும் இடத்தில் ஒன்றுகூடி சிரித்து, பேசி, உண்டு மகிழ்ந்த நண்பர்கள் எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகள் யாவற்றிலிருந்தும் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், இலங்கை உட்பட இலங்கைச் சகோதரிக்கு அனுதாபம் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

அன்னாரின் அந்தியோட்டிக்கிரியை 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அதனைத் தொடர்ந்து 27-05-2017 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Philipp- Scheidemann- Haus, Holländische-Str-72-74 34 127 Kassel Germany என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். தனிப்பட்ட அழைப்பு விடுக்க மறந்திருந்தால் இவ்வறிவிப்பை அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark