பிறப்பு  இறப்பு
15 ஏப்ரல் 1942  7 ஏப்ரல் 2016
அமரர் செல்லையா செல்வரத்தினம்
பிறப்பு  இறப்பு
20 யூலை 1979  28 மே 2016
அமரர் சசிகுமார் குபேரினி

செல்லையா செல்வரத்தினம்
யாழ். மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா செல்வரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  

சசிகுமார் குபேரினி
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை, யாழ். மண்கும்பான், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சசிகுமார் குபேரினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணீரில் மிதக்க வைத்தாய் அன்று - இதயம்
கல்லாய்க் கனக்கிறதே இன்றும்
எண்ணடங்காத துயராலே நொந்து ஐயோ
இன்னும்தான் ஆறுதில்லை நெஞ்சு!

வையகமே அழுததம்மா அன்பால் - பெற்ற
வயிற்றோடு உயிர்பிரிந்த உன்னால்
மெய்யாக வாட்டுகிறதே சோகம் - எம்
மீதினிலே உனக்கென்ன கோபம்?

வாழத்தானே ஆசைப்பட்டு வந்தாய் - எம்மை
வாழவிட்டு நீ எங்கே சென்றாய்
காலத்தால் ஆறாத வலியா - நீ
கண்மூடிப் போனதென்ன விதியா?

பச்சிளம் குழந்தைகளைப் பாரு - தாய்ப்
பாசத்தைக் கொடுப்பதிங்கே யாரு
இச்செகத்தில் இதுபோலக் கொடுமை - தாய்
இல்லையேல் எது இருந்தும் அடிமை!

பிள்ளைக்கு பிறந்தநாள் சோகமா - தாய்
இறந்தநாள் பிறந்தநாள் ஆகுமா?
உள்ளநாள் வரை நெஞ்சு ஆறுமா - நெஞ்சைக்
குடைகிறதே உன்நினைவு மாறுமா?

ஐயாவை இழந்து நாம் தவிக்கையிலே - எம்மை
ஆற்றாமல் இருந்து நாளும் துடிக்கையிலே
மெய்யாக உளம்நொந்து நிற்கையிலே - ஐயோ
மீண்டும் இடி வீழ்ந்ததென்ன வாழ்வினிலே!

அடுத்தடுத்து உமையிழந்து போனோமே - நெஞ்சை
அடைக்கின்ற துயர் சுமந்தோர் ஆனோமே!
கெடுகாலம் எம்காலைச் சுற்றியதே - எங்கள்
குடும்பமே அழுதழுது ஊற்றியதே!

எங்கள் ஐயா ஆத்மாவும் சாந்தி பெறுகவே - எம்
குல விளக்கே குபேரினியும் சாந்தி பெறுகவே
உங்களிருவர் நினைவுகளும் எம்மில் வாழுமே - நீங்கள்
ஊட்டிச் சென்ற அன்பு என்றும் எம்மை ஆளுமே!

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

உங்கள் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள்

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark