அமரர் சேனாதிராசா மனோன்மணி
பிறப்பு : 6 செப்ரெம்பர் 1936 — இறப்பு : 12 மே 2015
திதி : 20 ஏப்ரல் 2017


யாழ். வேலணை கிழக்கு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராசா மனோன்மணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈராண்டு காலம் இமைப்பொழுதில் போனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை அம்மா இவ்வுலகில்!

அம்மா எங்கள் உயிருடன்
கலந்திட்ட உங்கள் உதிரம் எம் உடலில்
உள்ளவரை நீங்கள் எம் ஒவ்வொருவரின்
உயிருக்குள் உயிராக வாழ்வீர்கள்
எம்முடன் நாம் இவ்வுலகில் உள்ளவரை!


மறுபிறவி என இருந்தால் மீண்டும் நாம்
உங்கள் கருவறையில் புதிதாக உருவெடுத்து
உங்கள் மடியில் நாம் தவழ வேண்டும் அம்மா!

வானத்தின் நிலவாய் வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும் வாழும் உங்களுக்கு
எங்களது நினைவஞ்சலிகள் அம்மா!

உங்கள் பிரிவால் துயருறும் சகோதரர்கள், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

அன்னாரின் நினைவுப் பிரார்த்தனை கொழும்பில் அமைந்துள்ள அவரது மகன் சேனாதிராசா இரத்தினராசாவின் இல்லத்தில் நடைபெறும்.

தகவல்
ரசிலா கேமதாஸ்(மகள்- நோர்வே)
Loading..
Share/Save/Bookmark