அமரர் மயில்வாகனம் அகிலன்
தோற்றம் : 28 யூன் 1975 — மறைவு : 20 மார்ச் 2016

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent Sheerness ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் அகிலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?

எத்தனை உறவுகள் இருந்தாலும் தோள்சாய அப்பா
இல்லையே என கதறி அழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்கவிட்டு வழி தெரியா தூரம்
விரைந்தோடி சென்றதேனோ ?

அண்ணா அண்ணா என
 ஆயிரம் முறை
அழைத்த உடன்பிறப்புகளை ஐயோ என
கதரவைத்து நெடுதூரம் விரைந்து சென்றதேனோ ?

அன்பான வார்த்தைபேசி பண்பாக யாவரும் போற்ற
வாழ்ந்த உன்னது உறவுகள் அனைவரையும்
மீளாத் துயரத்தில் ஆழ்த்தி அகிலத்தை விட்டகன்று
ஆண்டொன்று ஆனதுவே ஐயகோ ஆண்டுகள்
என்ன ஜென்மங்கள் ஆனாலும் மாறுமோ நம் துயரம்

காலமது தோற்றதனால் காலன் அவன் வென்றுவிட்டான்
ஆண்டவன் அடியில் அழுது புலம்புகிறோம் அகிலன் என்ற
பெருமகனை உன் மகனாய் ஏற்றிடுவாய்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark