அமரர் கந்தையா நடேசன்
பிறப்பு : 15 சனவரி 1945 — இறப்பு : 17 சனவரி 2017

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், பொன்னாலை, மன்னார், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நடேசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் உயிராக எங்கள் உணர்வாக என்றும்
எங்கள் உறவாக இருந்து
எங்களை வழி நடத்திய அன்புத் தெய்வமே!
எமையெல்லாம் ஆரத்தழுவி அன்பு முத்தம் தந்து அறிவுரைகள்
பலவும் தந்து அவனியில் பெயர் சொல்ல வைத்த அப்பாவே!
அம்மாவின் கண்ணீர் அடக்க முடியவில்லை அகத்தினில்
அழும் எமது உள்ளம் ஆறமுடியவில்லை!

தேடியே தந்த மருமக்கள் உறவுகள் எல்லாம் மனம் நோகின்றன
எமைத் தூக்கி வளர்த்த கரத்தால் ஆரத்தழுவிய
பேரப்பிள்ளைகள் தாத்தா தாத்தாவென அழுகின்றனர்!
ஊர் உறவுகள் அனைவரையும் சடுதியிலே விட்டு
விட்டு ஆண்டவனின் திருவடியில் சென்றுவிட்டீர்களே!

எங்கள் குடும்பத்தலைவர் கந்தையா நடேசன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் பல்வேறு வழியிலும் உதவிநின்ற அன்பான உறவுகளுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக் கிருத்திய நிகழ்வு எதிர்வரும் 16-02-2017 வியாழக்கிழமை அன்று ஏழாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி(கமலவதனி),
பிள்ளைகள்(கிரிஜா, அனுஜா, கோபிநாத், தனுஜா),
பேரப்பிள்ளைகள்(பிரியந், சமிஷ்கா, ரிதஷ்கா),
மருமகன்கள்(கண்ணன், தேவராஜ்), மற்றும் உற்றார் உறவினர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலவதனி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94712022498
கோபிநாத்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695666993
Loading..
Share/Save/Bookmark