அமரர் அலையப்போடி இராசதுரை
(பாலு)
பிறப்பு : 19 சனவரி 1960 — இறப்பு : 9 சனவரி 2016

மட்டக்களப்பு பண்டாரியாவெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த அலையப்போடி இராசதுரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இவ் அகிலத்தில் உம்மைப்போன்ற ஓர் பிறவி
உதிர்ப்பது கோடியில் ஒன்றுதான்!
உங்கள் தாராள குணமும், வசீகர பேச்சும்,
திடமான உடலும், அழகிய சிரிப்பும்,
நிறைந்த நினைவுகள்
எங்களை விட்டு என்றும் அழியாது!

அரலி விதையில் விதைத்த பாசக்காரர்,
ஆளை கொல்லும் நேசக்காரர்!
அன்போடும் கர்வத்தோடும் எங்களுக்கு
அன்னம் ஊட்டிய இந்த கைகளுக்கு,
மன தைரியத்தையும், உடல் பலத்தையும்
கொடுத்த உங்களுக்கு!
பல பணிகளை புரிந்து, சேவகனாய் வாழ்ந்து,
பல இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து
மனம் தளராமல் வாழ்ந்த உங்களின்
அழகான ஆன்மாவுக்கு எங்களின் சின்ன
ஒரு வருட நினைவஞ்சலி சமர்ப்பணம்!

உங்கள் ஆன்மா சிவன் அடியில் சேர என்றும் மன்றாடும்
மனைவி சந்திராதேவி, மகன் தவேஸ்வரன், மகள் நந்தினி, மருமகள் குவேந்தினி,
பேரப்பிள்ளைகள் சுமித், சகோஜித், அலையபொடியார் குடும்பத்தினர், சின்னத்தம்பி குருக்கள்,
தம்பையா குடும்பத்தினர் உறவினர், நண்பர்கள், மற்றும் நாகர் விளையாட்டு கழகம் பண்டாரியாவெளி.

இந்த ஓராண்டு நினைவு நிகழ்வுகளை எம்மோடு கைகோர்த்து நடாத்த உதவிய மற்றும் பங்குப்பெற்ற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றொம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94754295419
Loading..
Share/Save/Bookmark