அமரர் சிவநேசன் பத்மரூபி
(முன்னாள் ஆசிரியை- Jaffna HolyFamily Convent, Vavuniya Rambaikulam Girls' Maha Vidyalayam,
Negombo Wijeyaratnam Hindu Central College

)
தோற்றம் : 15 ஏப்ரல் 1967 — மறைவு : 16 டிசெம்பர் 2016

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசன் பத்மரூபி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்தும்
ஆறுதலுக்கு நீங்கள் இல்லை
எண்ணிப் பார்க்கின்றோம் நம்ப முடியவில்லை
நீங்கள் இல்லையா எங்களோடு...

உங்கள் கனவுகள் நிறைவேறும்
காலம் வரும்போது உங்களை 
காலன் கவர்ந்ததெல்லாம் கனவாகிப் போகாதோ!
ஏங்கித் தவிக்கின்றோம் எப்போதுவருவீர்கள் ?
மீள முடியவில்லை -எங்களிடம்
மீண்டும் வரவேண்டுகின்றோம்.

எமது இல்லத் தலைவியின் மறைவுச் செய்திகேட்டு உடன் வந்து, ஆறுதல் கூறிய அனைவருக்கும், தாயகத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நேரில் வந்தும், தொலைத்தொடர்புச்சாதனங்கள் ஊடாகவும், எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலி, மலர்வளையங்கள் சமர்ப்பித்தும், மரணச்சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும் இறுதிக்கிரியையில் சகலவழிகளிலும் உதவியவர்களுக்கும், அந்தியேட்டி சபிண்டீகரணக் கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், இன்னும் பல்வேறுவழிகளில் உதவியும், ஒத்தாசையும் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிரியை 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப. 12:00 மணியளவில் Salle Jeanne d'Arc50 , place de Torcy, 75018 Paris. (Métro: 12Marx Dormoy, Bus: 60, 65,35) எனும் மண்டபத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள், குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — பிரான்ஸ்
தொலைபேசி:+33625829041
Loading..
Share/Save/Bookmark