அமரர் சந்திரலிங்கராசா பிறேம்நாத்
பிறப்பு : 22 ஏப்ரல் 1983 — இறப்பு : 19 யூலை 2007

யாழ். வடமராட்சி மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano Mendrisio ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரலிங்கராசா பிறேம்நாத் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை பிறேம்
ஆண்டுகள் எட்டு சென்றாலும்
உன் நினைவுகள் எங்கள்
மனதில் நிழலாக நிற்கின்றன!

உன் நினைவுகளை தந்துவிட்டு
உறவுகளை புலம்பவிட்டு
எங்களை தவிக்க விட்டு
எங்கே சென்று விட்டாயடா?

மலர்ந்த பூ முகமும் மகிழ்ச்சி பொங்கி நிற்கும்
உன் முத்து முத்தான புன்சிரிப்பும்
பாசத்தை விதைத்து பேசாமல் விரைந்து
நீ எங்கே போனாய் ஐயா!

அன்பு பிறேம் எமக்கு சொத்தாய்
கிடைத்திட்ட பாச பிறேம்!
வீடு நோக்கி வரும் நேரம் பார்த்திருக்க
வீதிதனில் வைத்து எமன் உயிர் பறித்தானோ

உதிரும் கண்ணீரோடு உனையிழந்து
தவிக்கின்றோம் பிறேம் பிறேம் ஐயா!!!
உன்னை இழந்து விட்ட பாவிகளாய் நிற்கின்றோம்

எம் பாசமலரே பிறேம்!
எங்கள் உயிர் உள்ளவரை உன் நினைவுகள்
நெஞ்சை விட்டு நீங்காதடா பிறேம்!

நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு அப்பா, அம்மா,
சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்

தகவல்
குடும்பத்தினர்